தமிழகத்தில் கடும் வெயில்-சேலத்தில் 102
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இப்போதே தமிழக நகரங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில் 102 டிகிரியை வெயில் தொட்டுள்ளதால் கடும் வெப்பத்தில் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. இருப்பினும் முழு வீச்சுக்கு அது வரவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்தின் அனைத்துப் பெருநகரங்களிலும் கடும் வெயில் அடிக்கிறது. சேலத்தில் நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.
அதேபோல வேலூரில் 100 டிகிரி, திருச்சியில் 98, சென்னையில் 94 என வெயில் வெளுத்துக் கட்டியது.
சென்னை மீனம்பாக்கத்தில் (புறநகர்ப் பகுதிகளில்) 96 டிகிரி வெயில் பதிவானது. தூத்துக்குடியிலும் 94 டிகிரிக்கு வெயில் கொளுத்தியது. மதுரையிலும் இதே நிலைதான்.
கடலோர மாவட்டங்களில் பிற்பகலுக்கு மேல் காற்று வீசத் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
கோடைகாலம் முழு அளவில் தொடங்க ஆரம்பித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் இரவு நேரங்களில் பனி விழுவதால் ராத்திரி நேரங்களில் சற்று குளுமை காணப்பட்டது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications