பெரம்பலூர் கலெக்டர் அலுவலம் முற்றுகை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வன்முறையில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் அருகே உள்ளது திருமாந்துறை கிராமம். இந்த கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் சார்லஸ்.
இவர் அக்கிராமத்தில் உள்ள பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி வருவதாகவும் கூறி கிராம மக்கள் பலமுறை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமுற்ற கிராம மக்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒன்றிய கவுன்சிலர் சார்லசை குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போராடினர்.
மேலும் அக்கிராமத்திலுள்ள அரசு மதுக்கடையால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அந்த மதுபான கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications