6 தொகுதிகள்..முத்தரையர் பேரவை தனித்து போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை: வரும் மக்களவைத் தேர்தலில் முத்தரையர் பேரவை 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளத்துரை விடுத்துள்ள அறிக்கையில்,
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முத்தரையர் பேரவை சார்பில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர், பெரம்பலூர், தேனி ஆகிய 6 தொகுதிகளில் தனி்த்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கப்படுவார்கள்.
அதே போன்று திண்டுக்கல் மாவட்டம், மலையூர் ராஜாக்காடு, வலசை, சின்னமலையூர் போன்ற கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தால், அங்குள்ள முத்தரையர் பேரவை தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என கூறியுள்ளார் வெள்ளத்துரை.












Click it and Unblock the Notifications