சென்னை-85 சதவீத வாக்குசாவடிகள் பதட்டமானவை!

கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலின் போது சென்னையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் வாக்குசாவடிகளில் பதட்டமானவைகளை மதிப்பீடு செய்ய போலீஸ் தலைமையில் ஒரு குழுவும், தேர்தல் ஆணையம் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம் வாக்குசாவடி இருக்கும் இடங்களில் நடந்த குற்ற செயல்களின் எண்ணிக்கை, பொது சட்ட ஒழுங்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்து வருகிறது.
போலீசார் கடைசியாக நடந்த தேர்தல், சட்ட ஒழுங்கு, குற்றச்செயல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் பதட்டமிக்க வாக்குசாவடிகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பெயர் கூற விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடைசியாக நடந்த தேர்தலில் இருந்த சட்டம் ஒழுங்கு அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 3,773 வாக்குசாவடிகளில் 3,194 பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள 85 சதவீத வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கி்ன்றன.
மத்திய சென்னையில் 1,165, தென் சென்னையில் 1,074, வட சென்னையில் 955 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் இங்குள்ள 90 சதவீத வாக்குசாவடிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த வாக்குசாவடிகளில் கலவரங்களும், சட்டமீறல்களும், ரவுடிகளின் அராஜகமும், வாக்குசாவடிகளை கைப்பற்றும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் கணக்கெடுப்பிற்கும் இதற்கு அதிக ஒற்றுமை இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
இதையடுத்து தேர்தல் ஆணையம், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பேசிவிட்டு பாதுகாப்பு குறித்த இறுதி முடிவை அறிவிக்க இருக்கிறது.
அதில் வாக்குபதிவின் போது சென்னைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து சென்னையில் துணை ராணுவப்படை குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications