சென்செக்ஸில் காளை துள்ளல்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
மும்பை: மீண்டும் 11 ஆயிரம் புள்ளிகளை தொட்டுக் கொண்டு நிற்கிறது இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ். கடந்த 6 மாதங்களில் பங்குச் சந்தை இந்த அளவு அதிக புள்ளிகளைத் தொடுவது இதுவே முதல்முறை.
இன்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு கண்டது. 10993 புள்ளிகளில் வர்த்தகம் நடந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
நிப்டியிலும் இந்த முன்னேற்றப் போக்கு தொடர்கிறது. இன்று 46 புள்ளிகள் அதிகம் பெற்று 3388 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இந்த சாதக வர்த்தகம் தொடர்கிறது. இந்த சீஸனில் அதிக லாபம் அடைந்தது ரிலையன்ஸ் நிறுவனம்தான். இந்த குழுமத்தின் ரிலையன்ஸ் இன்ப்ரா மட்டும் 160 சதவிகிதம் உயர்வு கண்டது. விரைவில் இந்த நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துவிடும் என்று கூறப்படுவதால், முடிந்தவரை அந்தப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் முதலீட்டாளர்கள்.
இன்று சத்யம் நிறுவனப் பங்குகள் 6 சதவிகித உயர்வு கண்டன. சத்யம் நிறுவனத்தை டெக் மஹிந்திரா வாங்கியிருப்பதால் தொடர்ந்து சாதகமான சூழலில் வர்த்தகம் நடக்கிறது. கடந்த ஜனவரியில் ரூ.20க்கு இந்தப் பங்குகளை வாங்கியவர்கள், இனி நல்ல லாபம் பார்க்க முடியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications