124 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தயார்

Subscribe to Oneindia Tamil

Electronic Voting Machines
டெல்லி: நாளை முதல் கட்ட வாக்குப் பதிவை சந்திக்கும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 124 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 17 மாநிலங்களில் நாளை 124 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இங்கு நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. ஆந்திராவில் 22 தொகுதிகளுக்கும், கேரளாவில் 20, உத்தரப்பிரதேசத்தில் 16, மகாராஷ்டிராவில் 13, பீகாரில் 13, சட்டீஸ்கரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இவை தவிர ஜம்மு காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த முதல் கட்ட தேர்தலில் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 122 பேர் பெண்கள் ஆவர்.

மெகபூப் நகரி்ல அதிகம்..

ஆந்திராவின் மெகபூப் நகர் தொகுதியிலும், சட்டீஸ்கரின் ராய்ப்பூரிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாளையே வாக்குப்பதிவு நடந்து முடிந்து விடும்.

இதில் இடதுசாரிகள் 19 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாரதிய ஜனதாக் கட்சி 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஆந்திராவில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, பிரஜா ராஜ்ஜியம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அங்கு நாளை 20 லோக்சபா தொகுதிகளுக்கும், 154 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

நாளைய தேர்தலில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள் - ரேணுகா செளத்ரி, ஜெயபால் ரெட்டி, புரந்தரேஸ்வரி, சந்திரசேகர ராவ், எர்ரான் நாயுடு, விஜயசாந்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.

அதேபோல ஒரிசாவில் 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபப்ட்டுள்ளன. வாக்குப்பதிவை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 17 மாநிலங்களில் 124 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில், 1 லட்சத்து 85 ஆயிரத்து 552 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

14 கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட பாராளுமன்ற தேர்தலுடன், ஆந்திராவில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 154 தொகுதிகளுக்கும், ஒரிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் 70 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

3 லட்சத்து 166 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன. 9 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தீவிரவாதிகள் அல்லது நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணிக்குள் முடித்துக்கொள்ளப்படும் என்றார்.

16% வேட்பாளர்கள் குற்றவாளிகள்:

முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பீகாரில் போட்டியிடும் 200 வேட்பாளர்களில் 51 பேர் குற்றப் பின்னணியுடன் கூடியவர்கள். இதில் 10 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள் அனைவருமே குற்றப் பின்னணி கொண்டவர்களாம்.

உ.பியில், ஏழு தொகுதிகளில் முற்றிலும் குற்றப் பின்னணி கொண்டவர்களே போட்டியிடுகிறார்கள்.

பீகார் மாநிலம் ஜகானாபாத் தொகுதியில் எட்டு வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். உ.பியின் சந்தாலி, சந்திரபூர் தொகுதிகளில் தலா 7 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

மொத்தத்தில் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 1440 வேட்பாளர்களில் தோராயமாக 222 பேர் அதாவது 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர்.

இவர்களில் 21 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன. 38 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், 14 பேர் மீ்து கடத்தல் வழக்குகளும் உள்ளனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+