கோதபய- பான் கி மூன் சிறப்பு தூதர் நம்பியார் பேச்சு

பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சக செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதிபர் ராஜபக்சேவையும் இவர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வடக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள ரத்தக்களறியை நிறுத்தும் முயற்சியாகவே விஜய் நம்பியாரை பான் கி மூன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
எந்தவித முன்னிறிவுப்பும் இன்றி விஜய் நம்பியாரை ஐ.நா. அனுப்பி வைத்துள்ளது.
முதலில் விஜய் நம்பியாரின் வருகையை இலங்கை அரசு விரும்பவில்லை. ஏற்கனவே இங்கிலாந்து நியமித்த சிறப்புத் தூதரான டெஸ் பிரவுனுக்கும் இலங்கை சம்மதம் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் பான் கி மூனின் ரகசிய முயற்சியாக விஜய் நம்பியார் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது வருகைக்கு இலங்கை அரசு சம்மதம் தெரிவித்ததாம்.
இலங்கையின் வட பகுதிக்கு ஐ.நா. சார்பில் படகுகள், கப்பல்களை அனுப்புவது குறித்தும் விஜய் நம்பியார், இலங்கை அரசுடன் பேசவுள்ளார். தற்போது நடந்து வரும் தாக்குதல்கள் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வருவோரை வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இவற்றைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாம்.
விஜய் நம்பியார் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் சண்டை ..
இதற்கிடையே, பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவம் தொடர்ந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதிலுக்குத் தாக்கி வருவதால் உயிரிழப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கைப் படைகள் தொடர்ந்து குண்டுகளை வீசித் தாக்கி வருவதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications