தலிபான்கள் அட்டகாசம்-பாக் சீக்கியர்களுக்கு வரி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பழங்குடியினர் பிராந்தியமான அவுர்சக்சாய் என்ற பகுதியில் வசிக்கும் சீக்கிய சிறுபான்மையினர் தலிபான் தீவிரவாதிகளுக்கு வரி கட்டி உயிர் பிழைத்து வருகின்றனர்.
அவுர்சக்சாய் பிராந்தியம் பெஷாவருக்கு அருகே உள்ளது.
இப்பிராந்தியம் தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இங்கு வசிக்கும் சீக்கியர்கள் வரி கட்ட வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
முதலில் சீக்கியர்கள் வரி கட்டாமல் இருந்தனர். இதையடுத்து அங்கு வந்த தலிபான்கள், சில சீக்கியர்களை அடித்து உதைத்து வீடுகளைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும் சீக்கிய தலைவர் ஒருவரையும் கடத்திச் சென்று விட்டனர்.
இதையடுத்து வரி கட்ட முன்வந்தனர் சீக்கியர்கள். அதன்படி ரூ. 2 கோடியை வரிப்பணமாக செலுத்தியுள்ளனராம்.
இஸ்லாமிய சட்டப்படி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வரி கட்ட வேண்டும் என தலிபான்கள் கூறுகின்றனர். ரூ. 5 கோடியை வரியாக கேட்டனர். ஆனால் 2 கோடி பணம் மட்டுமே தங்களால் தர இயலும் என சீக்கியர்கள் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டு அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டனராம்.
வியாழக்கிழமை இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்த சீக்கியர்களின் வீடுகளை விட்டு தலிபான்கள் வெளியேறியுள்ளனர். மேலும் கடத்தப்பட்ட சீக்கிய தலைவரான சைவாங் சிங்கையும் விடுவித்து விட்டனர்.
வரி கட்டியதைத் தொடர்ந்து அவுர்சக்சாய் பிராந்தியத்தின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாடலாம், எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என சீக்கியர்களை தலிபான்கள் அனுமதித்துள்ளனராம். மேலும் சீக்கியர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வோம் எனவும் தலிபான்கள் உறுதியளித்துள்ளனராம்.
மேலும், தங்களுக்குப் பயந்து வேறு பகுதிகளுக்குச் சென்ற சீக்கியர்களும் மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பலாம் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனராம்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications