பகல்பூர் கலவரத்திற்கு அத்வானியே பொறுப்பு-லாலு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸும் பொறுப்பு என்று கூறி, காங்கிரஸ் வட்டாரத்தை கடுப்படித்த மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பகல்பூர் கலவரத்திற்கு அத்வானிதான் காரணம் என தற்போது அடுத்த அடியைக் கொடுத்துள்ளார்.

1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் பீகார் மாநிலம் பகல்பூர் நகரில், இந்து ஊர்வலத்தின் மீது முஸ்லீம்கள் சிலர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து பெரும் கலவரம் மூண்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடந்த இந்த கலவரத்தி்ல 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் ஆவர்.

இந்த பெரும் கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் காமேஸ்வர் யாதவ். சமீபத்தில் பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸும் பொறுப்பு என லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார்.

இதையடுத்து பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அனில்குமார் சர்மா கூறுகையில், பகல்பூர் கலவரத்திற்கு லாலு பிரசாத் யாதவ்தான் காரணம். காமேஸ்வர் யாதவை அவர்தான் தண்டனை கிடைக்காமல் தடுத்து காப்பாற்றி வருகிறார்.

லாலு சொல்லித்தான் காமேஸ்வர் யாதவ் இந்த கலவரத்தையே ஏற்படுத்தினார். அப்போது இருந்த பீகார் காங்கிரஸ் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கலவரத்தைத் தூண்டி விட்டவர் லாலுதான் என்று கூறியிருந்தார்.

அனில்குமார் சர்மா குற்றம் சாட்டியுள்ள காமேஸ்வர் யாதவுக்கு கடந்த 2007ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டு, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆட்சியில் இருந்தபோது, மத நல்லிணக்கத்தை பேணிக் காத்ததாக காமேஸ்வர் யாதவுக்கு போலீஸ் பரிசு வழங்கி கெளரவித்தது.

அனில் குமார் சர்மாவின் புகாருக்கு இன்று லாலு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த கலவரத்திற்கு முக்கிய காரணமே எல்.கே.அத்வானிதான்.

அத்வானிதான் பகல்பூர் கலவரத்திற்கு பின்னணியில் இருக்கிறார். அவரது நண்பரான பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அத்வானியைக் காப்பாற்றி வருகிறார்.

இந்தக் கலவரத்திலிருந்து அத்வானியைக் காப்பாற்றுவதற்காக போலியான ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து, இந்த கலவர வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விசாரணக்கு மூடு விழா நடத்தியவர் நிதீஷ்குமார்தான்.

ஆனால் எனது அரசுதான் 3 நபர் விசாரணைக் கமிஷனை அமைத்து, அத்வானிதான் குற்றவாளி என உணமையை வெளிக் கொண்டு வந்தது.

அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையைத் தொடர்ந்துதான் பகல்பூர் கலவரம் நடந்தது என்று கூறியுள்ளார் லாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+