இன்னோவாவில் வலம் வரும் தேர்தல் பார்வையாளர்கள்
நெல்லை: நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் தொகுதிகளுக்கு வந்து விட்டனர். இன்னோவா கார்களில் தொகுதிகளை வலம் வந்து கொண்டுள்ளனர்.
நெல்லை, தென்காசி தொகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், தேர்தல் செலவு கணக்குகள், தேர்தல் விதிமுறை மீறல்களை பார்வையிடவும் 6 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
நாங்குநேரி, ராதாபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக ஏ.கே திரிபாதி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு சரத் எல் அகிர், கடையநல்லூர், தென்காசி தொகுதிகளுக்கு கெரூரி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளுக்கு மோகன், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துர் தொகுதிகளுக்கு ஜட்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நெல்லை, பாளை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட நிலயா மிட்டாஸ் மாற்றப்பட்டு புதிய பார்வையாளராக அனுராக் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தல் பார்வையாளர்கள் 6 பேரும் நேற்று தங்கள் பணியை துவங்கினர். தேர்தல் பார்வையாளர்களை கலெக்டர் பழனியாண்டி மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நேற்று காலை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
பின்னர் தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர் கெரூரி கலெக்டர் அலுவலகம் வந்து தென்காசி தொகுதியில் வேட்பு மனு தாக்கலை ஆய்வு செய்தார். நெல்லை தொகுதியின் பார்வையாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நெல்லை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலை ஆய்வு செய்தார்.
தேர்தல் பார்வையாளர்கள் 6 பேரும் தொகுதிகளை சுற்றிவர இன்னோவா கார் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல் பார்வையாளர்களுக்கும் தேர்தல் விதிமுறை மீறல்கலை படம் பிடிக்க தலா ஒரு போட்டோகிராபர், வீடியோ கிராபரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications