மதுரை மருத்துவமனை முன் பிரசாரம் செய்ய தடை
மதுரை: மதுரையில் அரசு மருத்துவமனைக்கு முன்பாக அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய போலீஸ் சூப்பிரன்டு தடை விதித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 13ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் தென்மண்டல திமுக செயலாளர் அழகிரி களமிறங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுரை முழுவதும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிடுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினையிலிருந்து கோரிப்பாளையமும் தப்பவில்லை.
மதுரையின் முக்கிய பகுதி என்பதால் அனைத்து கட்சியினரும் இங்கு அடிக்கடி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுரை அரசு மருத்துவமனை இருப்பதாலும், கலெக்டர் அலுவலகம், அண்ணா பஸ் நிலையம் போன்றவற்றுக்கு அதன் வழியாக தான் செல்ல வேண்டும் என்பதால் கோரிப்பாளையத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகம் அவதியுற்று வருகின்றனர். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை பகுதியில் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரன்டு பாலகிருஷ்ணனுக்கு புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரை கவனமாக படித்த அவர், பிரசாரம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு புறநகர் பகுதியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை மட்டும் பயன்படுத்த வேண்டும். மருத்துவமனை பகுதிகளில் பிரசாரம் செய்ய கூடாது என்றார் மதுரை போலீஸ் சூப்பிரன்டு பாலகிருஷ்ணன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications