பல்சுவை விருந்து-அதிமுக பிரமுகர் மீது வழக்கு
வாசுதேவநல்லூர்: கட்சிக்காரர்களுக்கு விருந்து அளிப்பதற்காக சாம்பார் சாதம், புளி சாதம் என விதம் விதமான சாப்பாடுகளை தயாரித்த அதிமுக பிரமுகர் மீது தேர்தல் பார்வையாளரின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட புளியங்குடி நகராட்சி 7வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பண்டாரம் என்கிற செல்வராஜ்.
இவருக்குச் சொந்தமான காலியிடத்தில் 500 பேருக்குத் தேவையா விருந்து தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் முருகையாவுக்குத் தகவல் போனது.
இதையடுத்து தாசில்தார், போலீஸாருடன் முருகையா அங்கு விரைந்து வந்தார். செல்வராஜிடம் என்ன இது என்று கேட்டபோது, மகனுக்கு காதுகுத்து, அதற்குத்தான் விருந்து என கூறியுள்ளார்.
சமையல்காரரிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர் செல்வராஜின் மகனுக்குப் பிறந்த நாள். அதற்குத்தான் விருந்து என வேறு விதமாக கூறினார்.
செல்வராஜ் வீட்டினரிடம் அதிகாரிகள் கேட்டபோது, கட்சிக்காரர்களுக்கு அளிப்பதற்காக விருந்து தயாராவதாக போட்டு உடைத்து விட்டனர்.
இதையடுத்து தேர்தல் பார்வையாளரின் உத்தரவின் பேரில், போலீஸார் செல்வராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications