மே 6ம் தேதி முதல் என்ஜினியரிங் விண்ணப்பங்கள்
சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இத் தகவலை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கட்டணம் ரூ. 250.
விண்ணப்பங்களுடன் 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பும் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை ஆன்-லைனிலும் டெளன்லோட் செய்து விண்ணப்பிக்கலாம்.
மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என்றார்.
மருத்துவ விண்ணப்பங்கள் வினியோகம் எப்போது?:
இதற்கிடையே மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications