107 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்தது
டெல்லி: பதினொரு மாநிலங்களில் உள்ள 107 தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது.
குஜராத்தில் 26 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 16, உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்காளத்தில் 14, பிகாரில் 11, கர்நாடகத்தில் 11, மகாராஷ்டிரத்தில் 10, காஷ்மீர், சிக்கிம், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய வற்றில் தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 107 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
இந்தத் தேர்தல் 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 1,65,112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
நக்சலைட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிகார், மேற்கு வங்கத் தொகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர்.
இன்று தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாஜக தலைவர் அத்வானி போட்டியிடும் காந்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடக்கம்.
அதேபோல முன்னாள் பிரதமர் தேவ கெளடா போட்டியிடும் ஹாசன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போட்டியிடும் மாதேபுரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா போட்டியிடும் ஷிமோகா ஆகிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்தது.
மும்பையின் அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது.
இன்றைய வாக்குப் பதிவுடன் நாட்டில் மொத்தமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 171 தொகுதிகளில்
4-வது கட்டமாக வரும் மே 7ம் தேதி 85 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.
5வது கட்டமாக 13ம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 86 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications