மதுரையில் வோட்டுக்கு நோட்டு-அறி்க்கை அனுப்பினார் குப்தா
சென்னை: திமுக சார்பில் அழகிரி போட்டியிடும் மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான புகார் அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.
இந்தத் தொகுதியி்ல் வாக்காளர்களுக்குப் பணம் தரப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் சார்பி்ல் அக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்தது.
பிரசாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் பெண்கள், முளைப்பாரி கொண்டு வரும் பெண்களுக்கு அந்த இடத்தில் ஒரு டோக்கன் தரப்படுவதாகவும், அந்த டோக்கனை அப்பகுதி திமுக வட்டச் செயலாளர் அல்லது திமுக தேர்தல் அலுவலகத்தில் காட்டினால் அங்கு பணம் வழங்கப்படுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்திருந்தது.
மேலும் மதுரை மாவட்ட நிர்வாகம் செயலிழந்துவிட்டதாகவும், அரசு நிர்வாகம் முழுக்க முழுக்க திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினாப்.
இந் நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இந்த புகார்கள் தொடர்பான அறிக்கையை நரேஷ் குப்தா அனுப்பியுள்ளார். மேலும் இன்று
சென்னை வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடமும் இது குறி்தது குப்தா விளக்குவார்.
இதற்கிடையே நவீன் சாவ்லாவை சந்தித்து இது தொடர்பாக நேரில் புகார் அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் அப்பாயிண்ட்மென்ட் கோரியுள்ளனர்.
உதவி கமிஷனர்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்:
இதற்கிடையே ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை நகர உதவி கமிஷனர் தங்கவேலு, ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் வானமாமலை ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை அதிமுக கூட்டணிக் கட்சியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தபோது அவர்களை விட்டுவிட்டு பிடித்து வந்த அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த அதிகாரிகள் மீது புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
19 'கவர்கள்' பறிமுதல்:
இந் நிலையில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டரான அழகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 14 திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ. 500, ரூ. 100 கொண்ட 19 கவர்களையும் பறிமுதல் செய்துள்ளதாக நகர போலீஸ் கமிஷ்னர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications