தமிழகத்தில் தொடரும் கடும் வெயில்-லேசாக மழை
சென்னை: தமிழகத்தில் நேற்றும் கடும் வெயில் அடித்தது. இன்றும் வெயில் சற்றும் குறையவில்லை. இருப்பினும் ஆங்காங்கு லேசான மழை பெய்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி இன்றுடன் 3 நாட்களாகிறது. முதல் நாளிலிருந்தே வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தொடர்ந்து வேலூரில்தான் கடும் வெயிலாக இருக்கிறது. நேற்று முன்தினம் 107 டிகிரி வெயில் அடித்தது. நேற்று 108 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் முற்பகல் 11 மணி நிலவரப்படி அங்கு 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
நேற்று பெரும்பாலான நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டிதான் வெயில் வெளுத்தது.
நெல்லையில் 106, திருச்சியில் 102, சென்னையி்ல 102, தஞ்சையில், 102, மதுரையில் 102, சேலத்தில் 100 என வெயில் கொளுத்தியது.
கோவையில் வெப்பநிலை 99 டிகிரியாகவும், கடலூரில் 97 டிகிரியாகவும் இருந்தது.
இன்று முற்பகல் நிலவரப்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காணப்பட்ட வெயிலின் அளவு...
வேலூர் - 100 டிகிரி பாரன்ஹீட்
சென்னை 100
மதுரை - 97
திருச்சி - 97
சேலம் - 97
அருப்புக்கோட்டை - 97
திண்டுக்கல் - 97
கோவை - 80
புதுச்சேரி - 89
சென்னை நகரில் வானம் சற்று மூடியே காணப்படுகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் கடும் வெயிலுக்கு மத்தியில் இதமான வானிலையும் காணப்படுகிறது.
இன்று மழை பெய்யலாம்...
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அக்னி வெயிலின் கடுமை அதிகமாக இருந்தாலும் வெப்ப சலனத்தின் காரணமாக நிலம் சார்ந்த நிகழ்வாக சில இடங்களில் கோடைமழை பெய்யலாம்.
அதன்படி, நேற்று தமிழகத்தின் உள்பகுதியிலும், கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications