ஆந்திர முதல்வர் ரெட்டியின் தந்தை கொலை - 11 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி
டெல்லி: ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டியைக் கொலை செய்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டி. இவர் கடப்பா மாவட்டத்தில் வசித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு மே 23ம் தேதி ராஜா ரெட்டியை, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த உமா மகேஷ்வர ரெட்டி என்பவர் உள்ளிட்ட 13 பேரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.
இதற்குப் பழிக்குப் பழியாக ராஜசேகர ரெட்டியின் உறவினர்கள், உமா மகேஷ்வர ரெட்டியை வெட்டிக் கொன்றனர். இன்னொரு கொலையாளியும் வெட்டிக் கொல்லப்பட்டார்.
மீதமிருந்த 11 பேர் மீது கடப்பா கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதில் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ராஜசேகர ரெட்டி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2006ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 11 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச், 11 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications