நாமக்கல் தொழிற்சாலையில் தீ-13 தொழிலாளர்கள் பலி

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே வைகை எம்பியார் என்ற தவிட்டில் இருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் நடத்தி வரும் இந்தத் தொழிற்சாலையில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இலங்கை அகதிகள் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 100 பேர் இங்கு பணியாற்றி வந்தனர்.
நேற்று இரவு ஷிப்ட் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பிகாரை சேர்ந்த 14 பேரும், இலங்கை அகதிகள் 19 பேரும் பணியாற்றி கொண்டிருந்தனர்.
இந் நிலையில் இரவு 8.45 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தவிட்டு மூட்டைகள் எரிந்தன. பின்னர் தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதில் எல்லா தொழிலாளர்களும் தொழிற்சாலைக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் கிடைத்ததும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், வேகமாக காற்று வீசியதால் தீ பயங்கரமாகப் பரவியது. விடிய விடிய போராடி இன்று காலை 9 மணிக்குத் தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. ஆனாலும் இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.
இந்தத் தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 7 பேர் பலத்த தீக் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தான் வேறு யாரும் இறந்தார்களா? அல்லது காயம் அடைந்தார்களா? என்பது தெரிய வரும்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் தவிட்டு மூட்டைகள் ஏற்றி வந்த ஒரு லாரியும் எரிந்து சாம்லாகிவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications