சென்னை ஹூண்டாய் தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்!
சென்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தங்களது 4 நாள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் 18 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். நிர்வாகம் அதற்கு செவிசாய்க்காததால், கடந்த மே 4-ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் தமிழக தொழிலாளர் ஆணையர் அ சுகுமாரன் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிற்சாலை நிர்வாகமும், தொழிலாளர் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐடியுவின் அ. சவுந்திரராஜன் கூறுகையில், "தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென்றும், நிர்வாகம் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும் தொழிலாளர்களை நிபந்தனை ஏதுமின்றி அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. அதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டதால் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது" என்றார்.
இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புகின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications