உலகின் நம்பிக்கை மிக்க நிறுவனங்கள் பட்டியலில் டாடா, எஸ்பிஐ!
உலகிலேயே மிகுந்த நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் என்ற பெருமைக்குரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளன இந்தியாவின் டாடா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி குழுமங்கள்.
டாப் 200 நிறுவனங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் டாடாவுக்கு 11-வது இடமும், பாரத ஸ்டேட் வங்கிக்கு 29 வது இடமும் கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் டாடாவின் நம்பிக்கைத் தன்மைக்கு 80.89 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளது குளோபல் பல்ஸ் ஸ்கோர் எனும் புகழ்பெற்ற நிறுவனமாகும்.
இது மைக்ரோசாப்ட், கூகுள், ஜெனரல் எலெக்ட்ரிக், டொயோட்டா, கோக கோலா, இன்டெல் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகும்.
நம்பிக்கை, மதிப்பு, கவர்ச்சி மற்றும் நல்ல உணர்வு போன்ற காரணிகளின் அடிப்படையில் டாடாவுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தில் மட்டும் மொத்தம் 98 நிறுவனங்கள் இயங்குகின்றன. டாடா தவிர மேலும் 16 இந்திய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகின் நம்பிக்கைக்குரிய முதல் நிறுவனமாக பெரெரோ நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களில் இன்போஸிஸ் நிறுவனத்துக்கு 39வது இடமும், லார்சன் அண்ட் டூப்ரோவுக்கு 47வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் நிலை கார் தயாரிப்பாளரான மாருதிக்கு 49வது இடம் கிடைத்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கு 67வது இடமும், ஐடிசிக்கு 95வது இடமும் கிடைத்துள்ளது.
கனரா வங்கி சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் 102-வது இடத்தையும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 111வது இடத்தையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 112வது இடத்தையும், விப்ரோ டெக்னாலஜிஸ் 116 வது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், நம்பகத் தன்மையில் பெற்றுள்ள இடம் 132. மகிந்திரா அண்ட் மகிந்திராவுக்கு 137வது இடமும், பார்தி ஏர்டெல்லுக்கு 163வது இடமும் கிடைத்துள்ளன.
பட்டியலில் உள்ள மற்ற இந்திய நிறுவனங்கள்:
பாங்க் ஆப் பரோடா - 174, பாரத் பெட்ரோலியம்-175, பஞ்சாப் நேஷனல் வங்கி - 177.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications