'3வது அணி- போஸ் கொடுக்கத்தான் லாயக்கு'!
சென்னை: 3வது அணி என்பது மூன்றாம் தரமான அணியாகும். இது போட்டோவுக்கு போஸ் கொடுக்கத்தான் பயன்படும். இந்த அணியால் ஒரு வெற்றியும் பெற முடியாது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறுகையில், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி கூடுதல் இடங்களைப் பெறும். 180-க்கு மேற்பட்ட இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.
அ.தி.மு.க. கூட்டணி இயற்கை கூட்டணி அல்ல. அது சந்தர்ப்பவாதத்தால் உருவான கூட்டணி. அதேபோல, 3-வது அணி என்பதே மூன்றாம் தர அணி தான். இது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு தான் பயன்படும். இது வெற்றி பெறாது. இதுவரை மூன்றாவது அணி அமைத்த ஆட்சிகளும் நிலையானதாக இருந்ததில்லை.
தனி ஈழம் அமைப்போம் என இப்போது கூறுகிறார் கருணாநிதி. இது தேர்தலை மனதில் கொண்டு கூறியுள்ளதாகும். சென்னைக்கு நாளை சோனியா காந்தி வருகிறார். அப்போது அவர் தமிழ் ஈழம் குறித்த தனது நிலையை கூறட்டும்.
இலங்கையில் முதலில் உடனடியாக போரை நிறுத்தி, மறுசீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். தமிழர்களுக்கு அனைத்து நிலைகளிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலை. இதற்கு அமைய இருக்கும் எங்கள் கூட்டணி அரசு பாடுபடும் என்றார் வெங்கையா.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications