வைகோவை வீழ்த்த விருதுநகரில் பணம் விளையாடுகிறது-மதிமுக புகார்
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் மதிமுக பொது செயலாளர் வைகோவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக மதிமுகவினர் புகார் செய்துள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செலாளர் வைகோ போட்டியிடுகின்றார். அவரை எதிரத்து காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாகூர் என்பவர் களத்தில் உள்ளார்.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பணம் கொடுப்பதாக மதிமுகவினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளனர்.
அதில்,
திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஓட்டு போட பணம் கொடுக்க போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் போனில் புகார் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அருப்புக்கோட்டையில் உள்ள 36 வார்டுகளிலும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பார்வையாளர் ராஜேந்திரகுமார், உதவி தேர்தல் அதிகாரியிடமும் புகார் தெரிவித்தோம். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சில இடங்களில் பணம் கொடுத்து வந்த திமுகவினர், மதிமுகவினரை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் எங்களது கட்சியை சேர்ந்த கணேசன் என்பவர் ரூ. 6 ஆயிரத்து 750, 45 பூத் சிலிப்பையும் கைப்பற்றியுள்ளார். பின்னர் நாங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தோம். அதன் பின்னரே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாத்தூர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரிடம் ரூ. 59 ஆயிரத்து 250 போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் தேர்தல் விதி முறைகளை மீறி காங்கிரஸ் வேட்பாளர் செயல்பட்டு வருகிறார் என்பது தெரிகிறது.
தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நியாமான தேர்தலை நடத்த முன் வரவேண்டும். விருதுநகர் தொகுதிக்கு கூடுதல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications