புல்மோடை இந்திய மருத்துவமனை வவுனியாவுக்கு மாற்றம்
கொழும்பு: வட இலங்கையில், புல்மோடை என்ற இடத்தில் இந்தியா அமைத்துள்ள தற்காலிக கள மருத்துவமனை, அங்கிருந்து வவுனியாவுக்கு மாற்ற்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 52 டாக்டர்கள், நர்சுகள் அடங்கிய இந்திய மருத்துவ குழு புல்மோடை என்ற இடத்தில் தற்காலிக கள மருத்துவமனையை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.
தற்போது போரில் காயமடைந்து வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் புல்மோடை மருத்துவமனையில் அத்தனை பேருக்கும் சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை.
எனவே வவுனியாவுககு இந்த மருத்துவமனையை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வவுனியாவில் புதிய கள மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். புல்மோடை மருத்துவமனைதான் தற்போது வவுனியாவுக்கு கூடுதல் வசதிகளுடன் மாற்றப்படவுள்ளது.
வவுனியாவில் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான வசதிகளுடன் இந்த மருத்துவமனை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துளளனர்.
போரினால் இடம் பெயர்ந்து வந்தோர், ராணுவத்தால் மீட்கப்பட்டவர்கள் என கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் வவுனியாவில்தான், வேலியால் அடைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் ராணுவத்தால் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications