கர்ப்பிணியை சித்ரவதை செய்த சென்னை போலீஸ்
சென்னை: சென்னையில் கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவரையும் போலீசார் அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎப் காலனியில் இருக்கும் சசிகுமார், ஊர்க்காவல் படையில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி ரீனாவும் அவருடன் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலை நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று பிரியாணிக்கு ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டர் செய்து வெகு நேரமாகியும் பிரியாணி அவர்கள் கைக்கு வந்து சேரவில்லை.
இதையடுத்து அவர்கள் ஹோட்டல் சர்வரிடம் கேட்டுள்ளனர். அப்போது சசிகுமாருக்கும், சர்வருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அது கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது அந்த சர்வர், சசிகுமாரை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் ஹோட்டல் அதிபர் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் குமார், சசிகுமாரையும், அவரது கர்ப்பிணி மனைவி ரீனாவையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் இது குறித்து ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு விரைந்து் வந்து அதிகாலையில் சசிகுமார் மற்றும் ரீனாவை மீட்டனர்.
அப்போது சசிகுமார் கூறுகையில் என் மீது தவறு இருப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் எழுதி தரச் சொல்லி வற்புறுத்தினார் என்றார். ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் குமார் அவர்கள் பிரியாணி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறினார்.
இந்நிலையில் போலீசாரால் தாக்கப்பட்டு வீடு திரும்பிய கர்ப்பிணி ரீனாவுக்கு நேற்று மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கப்ப்டடது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications