இலங்கைக்கு 2 பில்லியன் உலக நிதியத்தின் கடனுதவிக்கு அமெரிக்கா எதிர்ப்பு

இதனால் உலக நிதியத்தின் மிகப் பெரிய கடனுதவி இலங்கைக்குக் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஏற்கனவே சமீபத்தில் இங்கிலாந்தும், இலங்கைக்கு கடனுதவி தரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடனை இலங்கை அரசு பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஹில்லாரி கிளிண்டன், இலங்கையில் தற்போது மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அமெரிக்கா பெரும் கவலையுடன் உள்ளது. அங்கு போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.
இந்த நேரத்தில் இலங்கைக்கு மிகப் பெரிய அளவிலான கடனுதவியை உலக நிதியம் தருவது குறித்து யோசித்து வருவது பொருத்தமற்றதாகும்.
கடன் தருவதற்கு இது ஏற்ற நேரமல்ல. போரை முடிவுக்குக் கொண்டு வந்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நேரம் இது.
போரை நிறுத்தி விட்டு, பிறகு அங்கு என்ன மாதிரியான நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட வேண்டும் என்றார் ஹில்லாரி.
உலக நிதியத்தின் கடனுதவிக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இலங்கைக்கு திட்டமிட்டபடி நிதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications