சில நொடிகளில் ரூ.4,08,410 கோடி மதிப்பு உயர்வு: முதலீட்டாளர் காட்டில் மழை!
மும்பை: இன்றைய பங்குச் சந்தை உயர்வு காரணமாக முதலீட்டாளர்களின் காட்டில் பணமழை கொட்டியது. வர்த்தகம் ஆரம்பித்த சில நொடிகளுக்குள் ரூ.4,08,410 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு உயர்ந்துவிட்டது.
இதனால் பங்குதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
பங்குச் சந்தை ஆரம்பத்தில் 1300 புள்ளிகள் உயர்ந்த போது ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டாளர் சொத்து மதிப்பு உயர்ந்தது. தற்காலிக நிறுத்தத்துக்குப் பிறகு சந்தை மீண்டும் துவங்கிய சில நிமிடங்களில் மேலும் 2 லட்சம் கோடிவரை உயர்ந்தது.
குறிப்பாக சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்பு மட்டுமே ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
"இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்க கடும்போட்டி நிலவியது. குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவு ஆர்வம் காட்டியதால் பங்குகள் மதிப்பும் ஏகத்துக்கும் உயர்ந்துவிட்டது. இந்த நிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரும்' என்று ஆஷிகா பங்கு வர்த்தக மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications