கன்னியாகுமரியில் பாஜக தோல்வி-சமக பிரமுகர் மொட்டை
நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தோல்வியடைந்ததற்கு வருத்தம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் மொட்டை போட்டு கொண்டார்.
தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் தியோடர் சாம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பாஜக வெற்றி பெற உழைத்தனர். ஆனால், பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனிடம் 68,472 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைடந்தார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தியோடர் சாம் மொட்டை போட்டு கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் மதவாதம் தலைவிரித்தாடுகிறது. பாஜகவை மதவாத கட்சி என்று பிரச்சாரம் செய்தவர்கள். தற்போது அங்கு மதவாதத்தை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த செயல் வெட்க கேடானது. இதற்காக வருத்தம் தெரிவித்து நான் மொட்டை போட்டுள்ளேன் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications