தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளுடனான போரை முடித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியத் தூதர்களாக எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் கொழும்பு சென்றுள்ளனர். இன்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளனர்.
கொழும்பு கிளம்புவதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியை நாராயணன் சந்தித்து ஆலோசனை பெற்று சென்றுள்ளார்.
இந்தியாவின் ரூ. 500 கோடி மறுசீரமைப்பு உதவிகள் குறித்தும் இலங்கை அதிபரிடம் மேனன், நாராயணன் குழு சொல்லவுள்ளது. மேலும், என்ன மாதிரியான உதவிகளை இந்தியாவிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கிறது என்பதையும் இந்தியா கேட்கவுள்ளது.
இந்தப் பயணத்தின்போது முக்கிய அம்சமாக, தமிழர் பகுதிகளி்ல் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமையை வழங்க வேண்டும். அதிகாரங்களை சம அளவில் பகிர்ந்தளிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் இந்தியா கோரவுள்ளது.
தங்களது பயணத்தின்போது பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டாரா என்பதையும் ராஜபக்சேவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேனன், நாராயணன் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் முதல்வரைச் சந்தித்த பின்னர் வெளியே வந்த நாராயணனிடம் செய்தியாளர்கள், பிரபாகரன் இறந்து விட்டாரா என்று கேட்டதற்கு, எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி அவர் இல்லை. இருப்பினும் இதை நாங்கள் இலங்கை அரசிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வோம். அதன் பிறகு உங்களுக்கும் தெரிவிக்கிறேன் என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே இன்னும் ஓரிரு நாட்களில், 30 டன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் இந்தியா, இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
அந்த விமானத்தில் 27 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும் செல்லவுள்ளது. வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் இந்தக் குழு பணியாற்றும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications