கடலூரில் அனைத்து கட்சிகளின் கொடிகள் எரிப்பு!
கடலூர்: கடலூர் அருகே திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த அனைத்து முக்கிய கட்சிகளி்ன் கொடிகளும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே வண்டிப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் கோவில் தெரு மற்றும் கரையேறவிட்டகுப்பம் 32வது வார்டு பகுதிகளில் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் என தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் கொடிக்கம்பங்கள் உள்ளது.
இந் நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் அனைத்து கட்சிக் கொடிகளையும் அறுத்து எறிந்து, தீ வைத்து கொளுத்தினர். பி்ன்னர் அந்த மர்ம நபர்கள் கொடிக் கம்பத்தின் கீழ் இருந்த கல்வெட்டுகளையும் அடித்து உடைத்து தப்பியோடினர்.
காலையில் அந்த பக்கம் வந்தவர்கள் இதை பாரத்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் சாண்டியின் உதவியுடன் அந்த இடத்தில் துப்பு துலக்கினர். தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications