மக்களவைத் தேர்தலில் 'ஓ' போட்ட 18,162 பேர்!
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 18,162 பேர் 49 'ஓ' படிவத்தை பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளதாகவும் புதுக்கோட்டையில் தான் அதிகபட்சமாக 12,366 பேர் இந்த படிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பிற மாநிலங்களில் ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தி மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் அந்த அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணமான நரேஷ் குப்தாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 732 வாக்கு சாவடிகளில் வழக்கத்தை விட 15 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.
வாக்களிக்க விரும்பாத 18,162 பேர் 49 'ஓ' படிவத்தை பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் தான் அதிகபட்சமாக 12,366 பேர் இந்த படிவத்தை பயன்படுத்தியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் படிவம் 6யை பயன்படுத்தி தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.
ரேஷன் கார்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் தான் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனை ஒரு ஆவணமாக பயன்படுத்துவதை ஏற்க முடியவில்லை. அதனால் தான் புகைப்படத்துடன் கூடிய 13 மாற்று ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ரேஷன் கார்டுகளை ஒரு ஆவணமாக ஏற்க வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கோரவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தான் இது பற்றிய பிரச்சனைகள் வந்துள்ளன.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications