பட்டதாரி இளைஞர்களை திரட்டும் நக்சலைட்டுகள்
ஹைதராபாத்: ஆந்திராவில் படித்த பட்டதாரி இளைஞர்களை தங்களது இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் நக்சலைட்டுகள் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்று இளைஞர்களை அவர்கள் மூளைச் சலவை செய்து இயக்கத்தில் இணைத்து வருகின்றனராம்.
ஆந்திராவில் மாவேயிஸ்ட் நக்சலைட்டுகள் ஊழல் தலைவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஊழல் தலைவர்களின் கொலை பட்டியல் ஒன்றை வெளியிட்டனர். அதில் முதல்வர் ராஜசேகர ரெட்டி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து ஆந்திர அரசு நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்தியது. இதற்காக ஏராளமான அதிரடிப்படையினர் நக்சலைட்டுகள் பதுங்கிய பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதில்,முக்கிய தலைவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல நக்சலைட்டுகள் காட்டுப் பகுதிகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் அரக்லோயா பகுதியில் ஏராளமான நக்சலைட்டுகள் புகுந்துள்ளனர். அவர்கள் கிராமம், கிராமமாக சென்று பட்டதாரி இளைஞர்களை சந்தித்து தங்கள் இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நக்சலைட் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications