மன நலம் பாதித்தவர் தாக்கி 4 பேர் பரிதாப பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மேலச்செவல்புரி என்ற கிராமத்தில் மன நலம் பாதித்த ஒருவர் கட்டையால் சரமாரியாக தாக்கியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
பொன்னமராவதி அருகே உள்ளது மேலச்செவல்புரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா சேர்வை. இவரது மகன் மருதுபாண்டியன். 36 வயதாகும் இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்.
இன்று காலை திடீரென கடும் கோபத்துடன் கட்டை ஒன்றை எடுத்து தெருவில் போனவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் மருதுபாண்டியன். இதில் சரோஜா, சுகுமாரி மற்றும் அழகி, பழனியப்பன் ஆகியோர் படுகாயமுற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் பழனியப்பனுக்கு வயது 72 ஆகிறது. சரோஜாவுக்கு 62, அழகுக்கு 58 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திடீர் பயங்கர சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி சரக ஐஜி மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி. உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர்.
மருது பாண்டியனை போலீஸார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications