சட்டீஸ்கரில் நக்சலைட்கள் குண்டு வீச்சில் 11 போலீஸார் பலி
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வீச்சில் 11 மத்திய ரிசர்வ் போலீஸார் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் டான்டேவாடா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸார் சென்ற வாகனம், நக்சலைட்டுகளின் குண்டு வீச்சில் சிக்கியதில் இந்த கோர சம்பவம் நடந்தது.
இதுகுறித்து டிஜிபி விஸ்வ ரஞ்சன் கூறுகையில், ராய்ப்பூரிலிருந்து 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கனாரா என்ற கிராமத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.
மத்திய போலீஸார் சென்ற வாகனத்தை நக்சலைட்டுகள் வழிமறித்தனர். பின்னர் வாகனத்தின் மீது குண்டு வீசித் தாக்கினர்.
ரோந்துப் பணிக்கான காவலர்களை டோனோகாபால் என்ற இடத்திலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தபோது நக்சலைட்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டனர்.
இந்த வாகனம் தவிர ஒரு ஜீப்பையும் வழிமறித்து நக்சலைட்கள் தாக்கினர்.
தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் படை அங்கு விரைந்தது. அதற்குள் நக்சலைட்கள் தப்பி விட்டனர்.
காயமடைந்தவர்கள் ஜகதால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications