புதிய சட்டசபையின் கார் பார்க்கிங் ஆகும் கூவம் இல்லம்
சென்னை: சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தின் கார் பார்க்கிங் கட்டுவதற்காக கூவம் இல்லம் இடிக்கப்படுகிறது.
கடந்த 1920ம் ஆண்டு இந்த இல்லம் கட்டப்பட்டது. சிவானந்தா சாலையில் (தூர்தர்ஷன் அலுவலகம் உள்ள சாலை) கூவத்தையொட்டி இந்த பெரிய பங்களா கட்டப்பட்டது. ஓமந்தூர் ராமசாமி அரசினர் தோட்டத்தின் ஒரு பகுதியில் இது அமைந்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், ஆளுநர் மாளிகையாக திகழ்ந்ததாகும். ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தங்கும் இல்லமாகவும் இருந்துள்ளது.
1974ம் ஆண்டு வரை இந்த கட்டடத்தை பலரும் பயன்படுத்தி வந்தனர். அந்த ஆண்டில் இது முதல்வர் இல்லமாக மாற்றப்பட்டது. ஆனால் ஒரு முதல்வர் கூட இங்கு தங்கியதில்லை. இதனால் இதை ராசியில்லாத கட்டடம் என முத்திரை குத்தி விட்டனர். யாரும் பயன்படுத்தாமல் சும்மா கிடந்தது கூவம் இல்லம்.
சரி முதல்வர்கள்தான் பயன்படுத்தவில்லையே, சபாநாயகர்களாவது பயன்படுத்தட்டும் என்று சபாநாயகர்களுக்காக இதை ஒதுக்கினர். முதல் சபாநாயகராக எம்.ஜி.ஆர். ஆட்சியில் சபாநாயகராக இருந்த முனு ஆதி இங்கு தங்கினார். ஆனால் அவரது ராசியோ என்னவோ, அரசியலில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது. இதனால் கூவம் இல்லம் உண்மையிலேயே ராசியில்லாத இல்லமாக பார்க்கப்பட்டது.
இதனால் சில காலம் யாரும் பயன்படுத்தாமல் இருந்தது கூவம் இல்லம். அரசு அதிகாரிகள் அவ்வப்போது இதை அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
இதுதவிர முக்கிய வழக்குகளின் விசாரணைகள், விசாரணைக் கமிஷன் விசாரணைகள் இங்கு நடந்து வந்தன.
இந்த நிலையில், கூவம் இல்லம் மிகவும் பாழடைந்து விட்டதால் இதை மூடி விட்டனர். இந்த சமயத்தில், புதிய சட்டசபை வளாகத்திற்கு தேவைப்படும் கார் பார்க்கிங்குக்காக இப்போது கூவம் இல்லத்தை இடித்து வருகின்றனர்.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications