'கத்திரி' போய் 'கத்தி'!-சென்னையில் அனல்!!
சென்னை: கத்திரி வெயில் எக்ஸ்டென்ஷன் ஆகியுள்ளதோ என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் கடும் வெயில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
வழக்கமாக கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் இன்னும் கடுமையாக இருக்கும்.
ஆனால் அக்னி நட்சத்திரம் போன பின்னர் படிப்படியாக வெயிலின் அளவும், அனலும் குறையும்.
ஆனால் சென்னை நகரில் இது தலைகீழாக உள்ளது. மே மாதத்தில் வெயில் பெரிய அளவில் இல்லை. ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் கொளுத்தி எடுக்கிறது.
கத்திரி வெயில் போய் கத்தி வெயில் வந்து விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு வெயில் மிகக் கடுமையாக இருக்கிறது. கொளுத்தும் வெயிலுடன், அனல் காற்றும் வீசுவதால் மக்கள் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினசரி 104 முதல் 105 டிகிரி வரையிலும் வெயில் பதிவாகி வருகிறது. மாலைக்கு மேல் லேசான காற்று வீசுவதால் சற்று நிம்மதியாக உள்ளது.
ஏன் இப்படி..
ஜூன் மாதத்தில் ஏன் இவ்வளவு அனலாக இருக்கிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வழக்கமாக கடல் காற்று 10.30 மணியளவில் வீசத் தொடங்கினால் வெயிலின் தாக்கம் குறைந்து இயல்பு நிலையில் இருக்கும்.
ஆனால் கடல் காற்று தாமதமாக வீசி வருவதால் வெயில் இயல்பை விட அதிகமாக உள்ளது என்றார்.
வெயில் தொடர்ந்து கடுமையாக இருப்பதால் குளிர்பானக் கடைகளில் இன்னும் கூட்டம் ஜே ஜே என்று காணப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். குற்றாலத்தில் சுத்தமாக மழை நின்று போய் விட்டது. இதனால் அங்கும் போக முடியாத நிலை மக்களுக்கு. மாநிலம் முழுவதும் வெயில் கடுமையாகவே இருப்பதால் மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போயுள்ளனர்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications