மெக்கானிக்குடன் ஓடிய பெண்-5 வருடமாக தேடும் சிபிஐ
சென்னை: கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மெக்கானிக்குடன் ஓடிப் போன பெண்ணை சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் தீயணைப்புத் துறை பணியாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகள் ஜான்சிராணி லட்சுமிபாய் (ஐந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு வயது 15).
பத்தாம் வகுப்பு படித்து வந்த அவரும், கலீல் என்பவரின் மகன் அகமது பாஷா என்பவரும் காதலித்தனர்.
பாஷா ஒரு மெக்கானிக் ஆவார். பள்ளி மாணவியான லட்சுமி பாய்க்கும், மெக்கானிக் பாஷாவுக்கும் இடையே காதல் தீவிரமானது. ஆனால் மதத்தைக் காரணம் காட்டியும், பாஷாவின் தொழிலைக் காரணம் காட்டியும் லட்சுமிபாயின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று பரீட்சைக்காக பள்ளி சென்ற லட்சுமி பாய், பள்ளிக்குப் போவது போல போக்கு காட்டி விட்டு காதலர் பாஷாவுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
இதுகுறித்து விழுப்புரம் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் இருவரும் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்துத் தெரியவில்லை.
பின்னர் வழக்கு சிபிசிஐடிக்குப் போனது. அதிலும் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வீரமுத்து. அங்கு விசாரணைக்குப் பின்னர் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த விசாரணையில் புதுச்சேரிக்கு காதலர்கள் இருவரும் தப்பிச் சென்றது மட்டும் தெரிய வந்தது. ஆனால் புதுச்சேரியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
காணாமல் போய் 5 வருடங்களாகியும் இதுவரை பாஷா, லட்சுமி பாய் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ. 50 ஆயிரம் பரிசளிக்கப்படும் எனவும் சிபிஐ அறிவித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications