சென்னை to நாகர்கோவில்-செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
சென்னை: பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில், செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் (0637) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜுலை 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இரவு 8.25 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (0638) கிளம்பும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0639) ஜுன் 29, ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 6.40 மணிக்கு கிளம்பும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு ஜுன் 30, ஜுலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு கிளம்பும்.
செங்கோட்டைக்கு..
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0609) ஜுலை 4, 11, 18, 25, ஆகஸ்டு 1 ஆகிய நாட்களில் இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜுலை 5, 12, 19, 26, ஆகஸ்டு 2 ஆகிய நாட்களில் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0651) ஜுன் 30, ஜுலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜுன் 29, ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மங்களூருக்கு..
இதேபோல நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு ஜுலை 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி 22.7.2009 முதல் 27.07.2009 வரை 5 நாட்கள் மேல்மருவத்தூரில் சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்பட குறிப்பிட்ட சில ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications