இலங்கை: அதிமுக-மதிமுக வெளிநடப்பு
சென்னை: ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வளக்குத் தொடர்வது குறித்து இன்று சட்டசபையில் அதிமுக கொண்டு வந்த தனி நபர் தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி தராததை கண்டித்து அக் கட்சியினரும் மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் எழுந்து, இலங்கையில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50,000 பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்தும் பிரச்சனை ஏழுப்ப முயன்றார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், இந்த பிரச்சனையை நேற்று தான் என்னிடம் கொடுத்தீர்கள், அது என் ஆய்வில் உள்ளது என்று கூறி பேச அனுமதி மறுத்தார்.
இதையடுத்து அதிமுகவினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில், இனப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி ஒரு தனி நபர் தீர்மானம் கொடுத்து பேச முயன்றோம். ஆனால், சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications