வரதட்சணை கொடுமை: தாய்-மகள் எரித்து கொலை
நாகர்கோவில்: வரதட்சணை கொடுக்காத குற்றத்திற்காக தாயும், மகளும் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் எரிந்து சாம்பல் மட்டுமே மிஞ்சியது.
இச்சம்பவத்தில் போலீஸார் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் உள்பட 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த கோட்டவிளையைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் தேவிகா (27). இவருக்கும் தோப்புவிளையைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அப்போது வரதட்சணையாக ரூ.ஒன்றரை லட்சம் ரொக்கமும், 51 பவுன் நகையும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டன.
கதிரேசன் கண்டன் விளையில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்த பின்பு கதிரேசன் மனைவி தேவிகாவிடம் பெற்றோர் வீட்டிற்கு சென்று மேலும் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறினார். இதற்கு தேவிகா மறுத்ததால் கதிரேசனும் அவரது குடும்பத்தாரும் தேவிகாவை கொடுமைப்படுத்தினர்.
இதைக் கேட்டு மனம் உடைந்த தேவிகாவின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையைத் தருவதாக சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து தேவிகாவின் கணவர் வீட்டார் சாந்தமடைந்தனர். அமைதி நிலவியது. இந்த நிலையில் தேவிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
கடந்த 21-ந்தேதி தான் தேவிகாவின் பெற்றோர் அவரை கணவன் வீட்டில் விட்டு சென்றனர். தேவிகா புகுந்த வீட்டிற்கு போவதற்கு முன்பே அவரது பெற்றோர் ரூ.50 ஆயிரம் வரதட்சணை பாக்கியையும் செலுத்தி விட்டனர்.
இந்த நிலையில் தேவிகாவிடம் அவரது கணவர் கதிரேசன் மீண்டும் தகராறு செய்தார். வரதட்சணை பணத்தை அவரது தந்தை 6 மாதங்கள் கழித்து தந்திருப்பதாகவும், அந்த 6 மாதத்திற்கும் வட்டியாக ரூ.6 ஆயிரம் கூடுதல் பணம் வேண்டும் என்றும் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதைக் கேட்டு வேதனை அடைந்த தேவகா, கணவருடன் வாக்குவாதத்தி்ல ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தேவிகாவின் பெற்றோருக்கு அவரது கணவர் வீட்டிலிருந்து போன் வந்தது.
தேவிகா தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர் தேவிகா வீட்டுக்கு ஓடினர்.
அங்கு கட்டிலில் உடம்பு முற்றிலும் கருகிப் போன நிலையில் தேவிகாவும், அவரது குழந்தையும் இருந்தனர். எலும்பும், மண்டை ஓடும் மட்டுமே இருந்தது. இரு உடல்களும் முற்றிலும் கருகிப் போய் விட்டன.
இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில், இருவரும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரியவில்லை என்று போலீஸார் நம்பினர்.
தேவிகாவுக்கு அருகில் குழந்தையின் எரிந்து போன உடல் இருந்தது. அந்த அறையில் வேறு எங்குமே தீப்பிடித்த அறிகுறியே இல்லை.
எனவே இருவரையும் கொலை செய்து விட்டு பிணங்களைத் தீவைத்துக் கொளுத்தியிருப்பார்கள் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதையடுத்து தேவிகாவின் கணவர் கதிரேசன், தந்தை கந்தசாமி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications