ராணுவத்தில் சேருகிறது கருணா, பிள்ளையான் குரூப்!
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்த கருணா இப்போது ராஜபக்சே கட்சியில் சேர்ந்து அமைச்சராக இருக்கிறார்.
அவர் முன்பு தொடங்கிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இப்போது இருப்பவர் பிள்ளையான். இவருக்கும், கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்தான் தான் தொடங்கிய கட்சியிலிருந்தே வெளியேறி ராஜபக்சே கட்சியோடு ஒட்டிக் கொண்டார் கருணா.
இப்போது பிள்ளையான் கிழக்கு மாகாண முதல்வராக இருக்கிறார்.
இந்த நிலையில் இரு தரப்பையும் சேர்ந்த முன்னாள் போராளிகள் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனராம். கருணா குரூப்பைச் சேர்ந்தவர்களில் இதுவரை 140 பேர் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். மொத்தம் 540 பேர் விண்ணப்பித்துள்ளனராம்.
அதேபோல பிள்ளையான் குரூப்பைச் சேர்ந்த 100 பேர் சேர விண்ணப்பித்து இதுவரை 40 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனராம்.












Click it and Unblock the Notifications