குறுக்கே வந்த நாய்-கோவிலில் பஸ் மோதி 4 பேர் பலி
விழுப்புரம்: பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் குறுக்கே வந்த நாய் மீது மோதமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பியதில் கோயில் மீது பஸ் மோதி நான்கு பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாய்களால் மனிதர்களுக்கு பல நன்மை உண்டு என்றாலும் சில சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சாலைகளில் எதை பற்றியும் கவலைப்படாமல் குறுக்கும் மறுக்கும் ஓடி விபத்துகளை ஏற்படுத்துவது தான். இது போன்ற சம்பவங்களை அறியாத, கேள்விப்படாத வாகன ஓட்டிகள் யாரும் இருக்க முடியாது.
வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுக்கே வந்து, டிரைவரின் கவனத்தை திசை திருப்பி பெரிய விபத்தில் சிக்க வைத்துவிடும்.
இது போன்ற ஒரு சம்பவம் தான் நேற்று விழுப்புரம் அருகே நடந்துள்ளது. பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விழுப்புரம் கிழக்கு புதுவை சாலையில் உள்ள சவிதா சினிமா தியேட்டர் அருகில் வந்த போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதையடுத்து டிரைவர் பேருந்தை வேகமாக திருப்பினார். அப்போது அந்த பேருந்து அருகில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோயில் மீது மோதியது.
இதில், பஸ்சில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கொள்ளுப் பட்டினத்தைச் சேர்ந்த முத்துவேடி (50), காரைக்குடி செக்கிடிகேட்டில் வசிக்கும் சந்தியா (30), காரைக்குடியைச் சேர்ந்த ராஜாராம் மகன் காமராஜ் (45), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கண்ணன் (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து புதுவையைச் சேர்ந்த பஸ் டிரைவர் கபிலன் (42) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இது போன்ற விபத்துக்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தமிழக அரசு, உரிமம் பெறாத நாய்களுக்கு தனி இடம் அமைத்து இவைகளை பிடித்து அங்கு கொண்டு போய் அடைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications