900 பேரை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த பலே பெண்
சென்னை: சென்னையில் நலத்திட்ட உதவிகள் வாங்கி தருவதாக சுமார் 900 பேரை ஏமாற்றி பல கோடி ரூபாய் கமிஷன் வாங்கிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (35). இவர் தான் சமூகசேவகி என்றும் தனக்கு பல அறக்கட்டளைகள் தெரியமென்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் கூறி வந்துள்ளார்.
மேலும், அந்த அறக்கட்டளைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளார். தனது ஆசை வார்த்தையில் மயங்கிய பலரிடம் அவர்கள் கேட்கும் தொகைக்கு ஏற்ப ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை கமிஷனாக பெற்று கொண்டுள்ளார்.
அவர்களுக்கு நவயுகா அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு சொன்னபடி சீதாலட்சுமி பணம் வாங்கி தரவில்லை.
இதையடு்தது அவரால் பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் நேற்று இரவு டிபி சத்திரம் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தனர். இதை விசாரித்த போலீசார் அவர் 900க்கும் மேற்பட்ட மக்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததால் வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றிவிட்டனர். அவர்கள் சீதாலட்சுமியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏமாந்த பொதுமக்களில் சுமார் 100 பேர் இன்று காலை கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு நியாயம் வேண்டுமென என கோரிக்கை விடுத்தனர். அவர்களை அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்திய போலீசார் ஒரு சிலரை மட்டும் உள்ளே சென்று புகார் கொடுக்க அனுமதியளித்தனர்.
புகாரில், சீதாலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பணத்தை திருப்ப பெற்று தர வேண்டும் என அவர்கல் கோரிக்கை வைத்தனர். இதனால் கமிஷ்னர் அலுவலகம் பரபரப்பபாக காணப்பட்டது
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!











Click it and Unblock the Notifications