இத்தாலி ரயிலில் கேஸ் டேங்கர் வெடித்து 10 பேர் பலி
வியாரெஜியோ (இத்தாலி): இத்தாலியில், காஸ் டேங்கர்களுடன் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. அப்போது இரண்டு காஸ் டேங்கர்கள் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வியாரெஜியோ பிராந்தியத்தில் உள்ள துஸ்கான் என்ற நகரில் இந்த சம்பவம் நடந்தது.
காஸ் டேங்கர்கள் கீழே விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியுள்ளன. அப்போது அருகில் இருந்த சாலை மற்றும் 10 வீடுகளை தீ சூழ்ந்ததில் 10 பேர் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டு வெடித்தது போல பெரும் சப்தம் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 35 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
தடம் புரண்டு விழுந்துள்ள மற்ற கேஸ் டேங்கர்களை பத்திரமாக அப்புறப்பப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அவையும் எந்த நேரத்திலும் வெடித்து விடலாம் என்பதால் பெரும் அபாயம் நிலவுகிறது.
14 பெட்டிகளைக் கொண்ட இந்த சரக்கு ரயில், பிசா நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications