10ம் வகுப்பு தேர்வு ரத்து யோசனைக்கு ஜெ. எதிர்ப்பு
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விடலாம். நாடு முழுவதும் ஒரே போர்டின் கீழ் 12ம் வகுப்பு தேர்வை நடத்தலாம் என்ற மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபலின் யோசனையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல வாக்குறுதிகளை செயல்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு முனைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. 100 நாட்களுக்கான செயல் திட்டம் என்று அதிமுக முதன் முதலில் அறிமுகப் படுத்திய கொள்கையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றிக்கொண்டது போல் தோன்றுகிறது.
இதே போன்று பல தரப்பட்ட செயல்களுக்கு பயன்படக்கூடிய தேசிய குடிமகன் அடையாள அட்டை குறித்து சிந்தித்த ஒரே கட்சி அதிமுகதான். இந்த திட்டத்தை செயல்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு முடிவு செய்திருப்பது அதிமுகவின் தொலைநோக்கு பார்வைக்கும், தேசிய அணுகுமுறைக்கும் கிடைத்த ஒரு அங்கீகாரம்.
இதே போன்று நமது நாட்டின் கல்வி முறையில் பரந்த அளவிலான மாற்றங்கள் தேவை என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. நமது நாட்டு மக்களை எழுத்தர்களாக அல்லாமல் உலகத் தலைவர்களாக உருவாக்க கல்வி முறை, பாடத்திட்டம் மற்றும் கற்பிக்கும் முறை ஆகியவற்றில் முற்றிலும் புதுமையை புகுத்தும் வகையில் தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
நமது நாட்டின் கல்வி முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் பேசுவதும், நினைப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பினும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு திரும்ப பெறப்படும் மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு நாடு முழுவதும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது தன்னிச்சையானதாகவும், தெளிவற்ற சிந்தனை உடையதாகவும் தோன்றுகிறது.
தற்போது பல பட்டயப்படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி ஆகியவை பயிலுவதற்கு முன்மை தேவையாக உள்ளது 10ம் வகுப்பு தேர்ச்சி. சில வேலைகளுக்கு அடிப்படை பகுதியாகவும் 10ம் வகுப்பு தேர்ச்சி அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு தேவையில்லை என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது இம்மாதிரியான கல்வி பயில இருக்கும் மாணவ-மாணவியர் மற்றும் வறுமையின் காரணமாக வேலைக்கு செல்ல விருக்கும் இளைய சமுதாயத்தினரையும், அவர்களது பெற்றோர்களையும் பெரிய அளவில் திகைப்படையச் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மேல் மிகப்பெரிய சுமையையும் திணித்திருக்கிறது.
மேலும் இதனால் ஏற்படும் பயன்களையும், விளைவுகளையும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இது போன்ற முடிவை மத்திய அரசே எடுத்திருக்கிறது. இந்த முடிவு மத்திய அரசின் ஒருதலைபட்சத் தன்மையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய களங்கமாக கருதப்படுகிறது.
பொதுவான கல்வி முறை என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், நாடு முழுவதும் பிளஸ் 2 வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற தன்னிச்சையான அறிவிப்பு, அதன் விளைவுகள் குறித்து நன்கு சிந்திக்கப்படவில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
உதாரணமாக தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் உள்ள ஒரு மாணவருக்கான இந்தி வினாத்தாளும், இந்தியை தாய் மொழியாக அல்லது பொது மொழியாகக் கொண்டு படிக்கும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவரின் வினாத்தாளும் எப்படி ஒரே விதமாக இருக்க முடியும்?.
கபில்சிபலின் இந்த அறிவிப்பு குறித்து முதல்வர் கருணாநிதி மவுனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications