ஓரினச் சேர்ககையாளர்களின் உறவு தவறில்லை - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

இதன் மூலம் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரினச் சேர்க்கையை தடை செய்ய வழி வகுக்கும் ஐபிசி 377வது பிரிவையும் டெல்லி உயர்நீதிமன்றம் செல்லாது என்று கூறி விட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நீதிபதிகள் அஜித் பிரகாஷ், முரளிதர் ஆகியோர் பிறப்பித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பின்போது கூறுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது விதிக்கு புறம்பாக உள்ளது இந்த 377 வது சட்டப் பிரிவு.
ஒவ்வொரு குடிமகனும் தனது விருப்பப்படி வாழவு அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வகை செய்கிறது. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஐபிசி 377, இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டப் பிரிவின்படி இயற்கைக்குப் புறம்பான செக்ஸ் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டப் பிரிவை நீக்கக் கோரி சமீப காலமாக கோரிக்கைகள் வலுத்து வந்தன. சமீபத்தி்ல டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணிகளும் நடந்தன.
இந்த சமயத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications