Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறு கூட்டல்-முதலிடம் பிடித்த மாணவனுக்கும் அரசுப் பரிசுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வு தாள் திருத்திய ஆசிரியர்களின் அலட்சியத்தினால், 1184 மதிப்பெண்கள் பெற்றும் முதலிடத்தைத் தவற விட்ட வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த மாணவர் பாலமுருகனுக்கும், அரசு வழங்கும் அனைத்துப் பரிசுகள், லேப்டாப் உள்ளிட்டவை தரப்படும் என கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் பி.ரமேஷ், ஈரோடு லிங்கேஸ்வரன், கிருஷ்ணகிரி கே.சி.சிஞ்சு, கரூர் மாவட்டம் பிரவீன் ஆகிய நான்கு பேர் 1,183 மதிப்பெண்கள் தேர்வு மாநில அளவில் முதலிடம் ரேங்க் பெற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் எஸ்.பாலமுருகன் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்.

ஆங்கிலம் 193, இயற்பியல் 200, வேதியியல் 197, உயிரியல் 199, கணிதம் 200 என அனைத்து பாடங்களிலும் 190 மதிப்பெண்களுக்கு மேல பெற்ற இவர் தாய்மொழியாம் தமிழில் 187 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.

இதையடுத்து அவர் தமிழில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதில் அவருக்கு கூடுதலாக 8 மதிபெண்கள் போடப்பட்டு அவர் தமிழில் 195 மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மொத்த மதிப்பெண் 1,184 ஆக அதிகரித்தது. இது மாநில அளவில் முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களை விட ஒன்று கூடுதலாகும்.

இதையடுத்து 1,184 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் பாலமுருகனுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி இது நடைமுறையில் இல்லை என கூறிவிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

முதலில் அறிவிக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தான் மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதுதான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் உள்ள மதிப்பெண்கள் ரேங்க் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

ஆனால், மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் கூடுதல் மதிப்பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் வசுந்தராதேவி.

இவரது தேர்வு தாளை திருத்திய ஆசிரியர்களின் அலட்சிய போக்கும் மற்றும் கனவு குறைவின் காரணமாக இந்த மாணவர் தற்போது மாநில அளவில் முதலிடத்தை இழந்துள்ளார்.

அரசு சலுகைகள் - தங்கம் தென்னரசு அறிவிப்பு..

இந்த நிலையில், திருப்பத்தூர் மாணவனுக்கு முதல் மாணவனுக்கு கிடைக்க வேண்டிய ஊக்கத் தொகை, லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசும் போது, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற மாணவர் மறு கூட்டல் மூலம் 1184 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

அவருக்கு அரசு வழங்கும் பரிசு, ஊக்கத்தொகை, லேடாப், உயர்கல்வி உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த மாணவனுக்கு மறு கூட்டல் மூலம் கூடுதல் மதிப்பெண் கிடைத்ததா? அல்லது மறுமதிப்பீட்டின் மூலம் இந்த மதிப்பெண் கிடைத்ததா என பார்க்க வேண்டும்.

இருப்பினும் 1184 மதிப்பெண்கள் அவர் பெற்றிருப்பதால் அவருக்கு முதல் மாணவனுக்குரிய அனைத்து பரிசுகள், ஊக்கத் தொகை, லேப் டாப் அனைத்தும் முதலமைச்சர் மூலம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+