விஷ ஊசி-2 மகள்களை கொன்ற பெண் மன நல டாக்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு மகள்களுக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்த பெண் மனநல டாக்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். மனநல டாக்டர் ஒருவரின் இந்த விபரித முடிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகிணி பகுதியில் இருக்கும் அம்பேத்கார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் ரூபா. இவரது கணவர் ராஜ், நரேலாவில் உள்ள சத்தியவதி ராஜா அரிச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு தான்யா (4), டுவிங்கில் (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் டாக்டர் ரூபா தனது கணவரிடம் தனியாக மருத்துவமனை துவங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அதற்கு ராஜ் மறுத்துவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடு்தது ரூபா மாலை சுமார் 5 மணிக்கு வீட்டில் இருந்து கோபித்து கொண்டு தனது இரு மகள்களுடன் அப்பகுதியில் ஹோட்டல் சிட்டி பார்க்கில் சென்று தங்கியுள்ளார்.

மாலை 6 மணிக்கு ஷாப்பிங் சென்று குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அவர் ஒரு மருந்து கடைக்கு சென்று விஷ ஊசிக்கான மருந்துகளை வாங்கி கொண்டு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார்.

அதை இரண்டு குழந்தைகளுக்கு செலுத்திவிட்டு தனக்கு போட்டு கொண்டுள்ளார். பின்னர் தனது கணவருக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது கணவர் அந்த ஹோட்டலுக்கு போன் செய்து அவர்களை உடனே காப்பாற்றுமாறு கூறினர்.

இதையடுத்து அவர்கள் அருகிலிருந்த மேக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், டாக்டர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். டாக்டர் ரூபா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டாக்டர் ரூபாவின் உடல்நிலை தேறியவுடன் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+