ரயில்வே பட்ஜெட்: தமிழகம் பெரும் ஏமாற்றம்
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கும் பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. 5 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் அதில் 2 ரயில்களால் கேரளாவுக்கே பலன் அதிகம்.
மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் தொடர்பாக இடம் பெற்றுள்ள அம்சங்கள்..
- உலகத் தரம் வாய்ந்ததாக 50 ரயில் நிலையங்கள் மாற்றப்படவுள்ளன. அவற்றில் ஒன்று சென்னை சென்டிரல் ரயில் நிலையம். இதை லாலுவும் சொன்னார். இப்போது மம்தாவும் சொல்கிறார்.
- 50 ரயில் நிலையங்களில் ஷாப்பிங் பகுதிகள், உணவு விடுதிகள், பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளிட்டவை கொண்ட பன்னோக்கு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பட்டியலில் மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்கள் இடம் பெற்றுள்ளன.
- சென்னையில் ரயில்வே மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவை தனியார் அரசு கூட்டு செயல்பாட்டில் உருவாக்கப்படவுள்ளன.
- டெல்லி- ராயபுரம் இடையே பிரீமியம் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- சென்னை - டெல்லி இடையே நான் ஸ்டாப் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- சென்னையில் பீக் அவர் நேரங்களில் மகளிருக்கென தனி மின்சார ரயில்கள் விடப்படவுள்ளன.
- மதுரை-சென்னை வாரம் இருமுறை ரயில், மதுரை வழியாக கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படவுள்ளன.
- தமிழகத்தைச் சேர்ந்த சில ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஜம்முதாவி-மதுரை ரயில் நெல்லை வரையும், எர்ணாகுளம்-திருச்சி ரயில் நாகூர் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் தமிழகம் தொடர்பான சாதகமான அம்சங்கள்.
அதேசமயம், சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான மாடி ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படவில்லை.
சென்னை-மாமல்லபுரம் ரயில் பாதை அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
திண்டுக்கல்- மதுரை இடையிலான ரயில் பாதை இரட்டிப்பாக்கும் பணிகள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
கோவையிலிருந்து ஷோரனூருக்கு தினசரி ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைவிட கேரளாவுக்கு பலன் அதிகம்.
மேலும் திருப்பூர், சேலம் உள்ளிட்ட சேலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு எந்த திட்டமும் ரயிலும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் அடு்த்த தேர்தலில் பாடம் புகட்டினால் காங்கிரஸ்-திமுக கூட்டணி கோபித்துக் கொள்ளக் கூடாது.
பெங்களூர்-தூத்துக்குடி இடையே மதுரை வழியாக இடையே இன்னொரு ரயில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications