வருண் உயிருக்கு ஆபத்து - கண்டுகொள்ளாமல் இருக்கும் சிதம்பரம்: மேனகா பாய்ச்சல்
டெல்லி: வருண் காந்தியின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து சற்றும் கவலைப்படாமல், கூடுதல் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தும் அதை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்று மேனகா காந்தி பாய்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
வருண் காந்தி இன்று டெல்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், எனது வக்கீல்களைக் கொல்வதற்காக சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் 6 பேர் ஏவப்பட்டுள்ளனர். குறி பார்த்து சுடுவதில் வல்லவர்களான அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
உண்மையில் அவர்களின் குறி நானாகத்தான் இருக்கக் கூடும். எனவே எனது உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கும், இதுபோன்ற கூலிப்படையினருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
சோட்டா ஷகீலின் கூலிப்படையினர் பிடிபட்டுள்ளதன் மூலம், எனக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.
எனக்கு எதிராக கொலைச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறுகிய காலத்திற்குள் இது இரண்டாவது முறையாகும். தனிப்பட்ட முறையில், இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை என்று கூறியிருந்தார் வருண்.
இதற்கிடையே, ப.சிதம்பரம் மீது பாய்ந்துள்ளார் வருணின் தாயாரான மேனகா காந்தி. இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், எனது மகனின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாக உள்ளது. மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். வருண் காந்தி கொல்லப்பட வேண்டும் என அனைவரும் நினைப்பது போல தெரிகிறது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பது இயலாத காரியம் என பேசுகிறார் ப.சிதம்பரம் என்று சாடியுள்ளார் மேனகா காந்தி.
பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள வருண் காந்தி அவற்றிலிருந்து மீள்வதற்காக பல்வேறு வக்கீல்களை அமர்த்தியுள்ளார். அதில் ஒரு வக்கீலைக் கொல்லத்தான் சோட்டா ஷகீலின் கூலிப்படையினர் டெல்லிக்குள் ஊடுறுவியிருந்தனர். அவர்களைத்தான் நேற்று டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications