தமிழக கடலோரப் பகுதி பாதுகாப்பாக உள்ளது-ப.சி

சென்னையில் நேற்று இரவு போலீஸார் நடத்திய வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை இன்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது.
அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், மாநில அரசுகளுடன், உளவுத் துறை தகவல்களை மத்திய உள்துறை தொடர்ந்து பரிமாறிக் கொள்கிறது. அதேபோலத்தான் தமிழக காவல்துறையுடனும் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம். கடந்த மாதம் கூட உளவுத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு பெருக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் நிலையங்கள், ரோந்துப் பணிகள், சோதனைச் சாவடிகள் என தமிழக போலீஸார் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தீவிரவாத ஊடுறுவல் கடல் மார்க்கமாக ஏற்படாதபடி தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழக கடலோரப் பகுதி மிகவும் பாதுகாப்பாக இருப்பதை நான் மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடலோரக் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் ப.சிதம்பரம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications